rt

கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை அவர்களிடமே விடும் பட்சத்தில் அதற்கான தீர்வு கிடைக்க வாய்ப்பு – இரா சம்பந்தன்

கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை அவர்களிடமே விடும் பட்சத்தில் அதற்கான தீர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ள பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள அவர், தி ஹிந்து பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையில் இடம்பெறும் கடற்தொழில் பிரச்சினையில் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது.

குறிப்பாக இந்தியா இழுவைப் படகுகளை மேற்கொண்டு கடற்தொழில் ஈடுபடுவதனை கைவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் இழுவைப் படகுகளை தடுக்கும் சட்டமூலம் எம்.ஏ.சுமந்திரனால் கொண்டுவரப்பட்டு, இந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் இதன் போது இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.