தேசிய நல்லிணக்கம், சமாதானத்திற்கு தமிழ் ஊடகங்களே தடை; சுமந்திரன் குற்றச்சாட்டு

தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்திற்கு எதிராக தமிழ் அச்சு ஊடகங்கள் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் மத்திய நிலையம் மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனம் ஒன்றிணைந்து கடந்த 2006ஆம் ஆண்டில் தயாரித்த தேசிய ஐக்கியத்திற்கான ஊடகங்களின் பொறுப்பு தொடர்பான “வெலிகம பிரகடனம்“ குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய சுமந்திரன், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது ஊடகங்களின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்தும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ள அவர், ஒருசிலர் பொறுப்புடன் செயற்பட்டாலும் ஊடகங்கள் அதனை சிதைப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.