வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோருகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரியுள்ளார். சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வித அசெ்சுறுத்தலான விடயங்களும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் நோக்கில் படையினர் சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி செயற்திறனான காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் தமிழ் பேசும் காவல்துறையினர் கடமையில் ஈடுபட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.