வடகடலில் தென்னிலங்கை மீனவர்களின் வருகை அதிகம்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் முறைப்பாடு

இலங்கையின் வடகடல் பிராந்தியத்தில் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது குறித்து வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்கேனஸ்வரன் மற்றும் சுவிஸ் தூதுவருக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், 250 பேருக்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் நாயாறு, கொக்கிளாய், கொக்குத்துடுவாய், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் காரணமாக தமிழ்மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.