எமது நாடு இன்று சர்வதேசத்திற்கு அடிபணிய வேண்டியுள்ளது.

எங்களுடைய கடமைகளை நாம் நிறைவேற்றாததன் நிமிர்த்தம் நாம் இன்று சர்வதேச சமூகத்திற்கு அடிபணிந்து அவற்றை செய்ய எத்தனித்துக் கொண்டிரக்கிறோம்.எமது சர்வதேச ஒப்பந்தங்களை நிறைவேற்றதாததன் நிமிர்த்தம் அநீதியின் காரணமாக நாங்கள் சர்வதேசத்திற்கு அடி பணிந்து நடக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாடு இன்று தள்ளப்பட்டது என எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
யோயுன் புர 2017 நேற்று 29ம் திகதி திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக ஆரம்பித்த போது பிரத அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றும் போது இன்றைக்கு படிப்படியாக எமது மக்கள் மீட்கப்டுகின்றனர்.இது தொடரப்பட்டு எமது நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும். எமது நாடு சுதந்திரம் பெற்ற போது கிழக்காசியாவின் சுவிஸ்சலாந்து என பலர் கூறினார்கள் என்ன நடந்தது.?
இந்ந நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் இளைஞர்களாகிய நீங்கள் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் நாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் எல்லோர் மனங்களிலும் இருக்க வேண்டும்.
புதிய அரசாங்கத்தின் முயற்சியால் வெளிநாட்டு முதலீடுகள் எமது நாட்டை வந்தடைந்த வண்ணம் உள்ளது.அந்த நிலை தொடருமானால் நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார சுமையில் இருந்து மீண்டு ஒரு புதிய இலங்கையை உருவாக்க முடியும் .
இதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியம் நாட்டை முன்னெற்ற பாதையில் இட்டுச் செல்லக் கூடிய அறிவினை இளைஞர்கள் பெற்று அதன் மூலமாக கிடைக்கின்ற வேலை வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உங்களையும் நாட்டையும் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என தனது உரையில் எதிர் கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோசன் பொரேரா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் சட்டத்தரனி எரந்திக்க வெலிஅங்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் ஆளுனர் ஒஸ்டின் பெனான்டோ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.