விடுதலைப்புலிகளின் குற்றங்கள்? அமைச்சரின் கருத்துக்கு வடக்கு முதல்வர் பதில்

நாட்டில் இருக்கும் உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன “போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளினால் இழைத்த குற்றங்களை எவரிடம் விசாரிப்பது?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே முதலமைச்சர் குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

‘கடந்த கால யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதென்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றது, போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளினால் இழைத்த குற்றங்களை எவரிடம் விசாரிப்பது?” என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கும் வகையில் யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர்,

நாட்டில் இருக்கும் உரிய சட்டங்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகள் மீதுள்ள குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.