இந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்காதிருக்கின்றது

தமிழ் மக்கள் அரசாங்கம் தொடர்பில் திருப்தியற்ற நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

கடந்த அ ரசாங்கத்தைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 150 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரை தீர்வு வழங்கப்படாமை வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.