37

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிக நிதியைஒதுக்கீடு செய்த வடக்கு சுகாதார அமைச்சர்

2017ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் அதிகளவிலான நிதியை சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கியுள்ளார் வடக்கு சுகாதார  அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம்.

இதுதொடர்பில் மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மாகாண சபை உறுப்பினர்களுக்கான 2017ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 2.6 மில்லியன் ரூபா சமூக உட்கட்டுமான அபிவிருத்திக்காக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பாடசாலைகளுக்கு சுத்தமான வடிகட்டிய குடிநீர்  வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1.6 மில்லியன் ரூபாவும், நலிவடைந்த குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளுக்காக ரூபா 9 இலட்சமும், விவசாய அபிவிருத்திக்காக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவும், மதவழிபாட்டுத்தலங்களின் அபிவிருத்திக்காகவும், விளையாட்டுக்கழகங்களின் அபிவிருத்திக்காகவும் ரூபா 7 இலட்சம் அடங்கலாக மொத்தம் 6 மில்லியன் ரூபா இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.