புதிய அரசமைப்பு குறித்து மட்டக்களப்பில் கூடி ஆராய்ந்தது தமிழரசுக் கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் நேற்றுக் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
குறித்த கூட்டம் மட்டக்களப்பு ஊரணி  அமெரிக்க மிஷன் மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.
இதில் புதிய அரசமைப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் சார்ந்த பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.