உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல – சுமந்திரன்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த இந்த உத்தேச சட்டம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமான சிவில் உரிமைகளை முடக்கும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனவும், சித்திரவதைகளுக்கு இடமளிக்கும் வகையில் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை தடுக்கும் முனைப்புக்களுக்கு முழு அளவில் ஆதரவளிக்கும் அதேவேளை, குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கிலான அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.