ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­வுக்கும் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யி­லான சந்­தி­ப்பு!

ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­வுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று நாளை புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நாளை முற்­பகல் 11மணி­ய­ளவில் இச்­சந்­திப்பு நடை­

பெ­ற­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இச்­சந்­திப்­பின்­போது வேலை­வாய்ப்பைக் கோரி போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் வட­மா­காண பட்­ட­தா­ரி­களின் விடயம் சம்­பந்­த­மாக விசேட கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பாக வடக்கில் காணப்­படும் அரச வெற்­றி­டங்கள் தொடர்­பான தக­வல்கள் மற்றும் பட்­ட­தா­ரிகள் குறித்த தக­வல்கள் அடங்­கிய ஆவ­ணத்தை முத­ல­மைச்சர் ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கைய­ளிக்­க­வுள்ளார்.

அத்­துடன் வட­மா­கா­ணத்தில் காணி விடு­விப்பை வலி­யு­றுத்தி நடை­பெற்­று­வரும் தொடர் போராட்­டங்கள், காண­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டித்து தரு­மாறு நடத்­தப்­பட்டு வரும் போராட்­டங்கள் தொடர்­பா­கவும் இதன்­போது முத­ல­மைச்சர் பிரஸ்­தா­பிக்­க­வுள்ளார்.

வட­மா­கா­ணத்தில் பாது­காப்பு தரப்­பி­ன­ரி­டத்தில் உள்ள காணிகள் தொடர்­பான விட­யங்­க­ளையும் ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கைய­ளிக்­க­வுள்ளார். அத்­துடன் தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள், மாகா­ண­ச­பை­யினை வினைத்­திறன் மிக்­க­தாக கொண்டு செல்­வ­தற்கு காணப்­படும் தடைகள் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

வட­மா­காண பொதுச்­சேவை ஆணைக்­குழு, மற்றும் முத­ல­மைச்­சரின் செய­லாளர் ஆகிய பத­வி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிய­ம­னங்கள் தொடர்­பிலும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு முத­ல­மைச்சர் கொண்டு செல்­லவுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை முத­ல­மைச்சர் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மேலும் பகிரப்படுதல் உள்பட வடமாகாண அபிவிருத்தி தொடர்பிலும் ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தல்களைச் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.