யாழில் சுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாகவே அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதனிடையே, அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன் இன்று கொழும்பில் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா, அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.