விடுதலை வேண்டி போராடிய ஓர் இனம் கொன்று குவிக்கப்பட்ட நாள்! சி.சிறீதரன்

மே 18 என்பது இனத்தின் அடையாள நாள், தமிழர்களுடைய சுதந்திரம் பற்றி சிந்திக்க வேண்டிய நாள், இறந்து போன மக்களுக்காக அஞ்சலி செலுத்த வேண்டிய நாள், ஒவ்வொரு தமிழனும் அடையாளமாக கருதவேண்டிய நாள் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“தமிழர் வரலாற்றில் பல துன்பங்கள் நடைபெற்றுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள்,இதற்காக விடுதலை வேண்டி போராடிய நம் இனம், 2008ஆம் ஆண்டுகளின் இறுதியில் 1 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட இறுதி நாளாகவே இந்த மே 18ஆம் திகதியை பார்க்கின்றோம்.

இந்த மே 18 நினைவேந்தல் நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் மைதானத்தில் மூன்றாவது ஆண்டாக முன்னெடுத்து வருகின்றோம்.

எட்டு ஆண்டுகள் கடந்திருந்தாலும், அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக, எமது இனத்தின் பயணத்தில் தமது பாதங்களை ஆழமாக பதித்து பயணிக்கும் நாளாக இந்த மே 18 அமைய வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.