வித்தியா படுகொலை சம்பவத்தின் பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் – பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தின் பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே குறித்த படுகொலை வழக்கை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.