காணாமல்போனோர் – ஜனாதிபதி நேரடியாகவே உரையாடி பொருத்தமான பொறிமுறையினை ஏற்படுத் கோரிக்கை

வடக்கு கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல்போனோர் உறவுகளில் இருந்து மாவட்டந்தோறும் 5 பேரை அழைத்து ஜனாதிபதி நேரடியாகவே உரையாடி பொருத்தமான பொறிமுறையினை ஏற்படுத்தி அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நிதி அமைச்சின் கீழ்உள்ள களஞ்சிய சேவைகள் தொட்பான விவாதம் நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்றபோதே குறித்த விடயம் தொடர்பில் கூட்டமைப்லின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ. சாள்ஸ் நிர்மலநாதன் மேற்படு வேண்டுகோளை விடுத்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல்போனோர் உறவுகளில் இருந்து மாவட்டந்தோறும் 5 பேரை அழைத்து ஜனாதிபதி நேரடியாகவே உரையாடி பொருத்தமான பொறிமுறையினை ஏற்படுத்தி அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க வேண்டும். ஏனெனில் குறித்த விடயம் தொடர்பில் வடக கு கிழக்கில் கடந்த 80 நாட்களாக காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர.

இதற்கான தீர்வினை ஜனாதிபதியே வழங்க வேண்டும். அதற்கான அழுத்தத்தினை தற்போதைய நிதி அமைச்சரும் வழங்க வேண்டும். ஏனெனில் தற்போதைய நிதியமைச்சர் அயலுறவு அமைச்சராக இருக்கும் சமயம் குறித்த விடயம் தொடர்பில் முழுமையாக அறிந்து வைத்துள்ளவர் என்ற வகையில் தற்போதைய நிதியமைச்சர் உடனடியாக இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் பிரகாரம் ஜனாதிபதி சகல மாவட்டத்திலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளில் 5பேர் அழைத்து நேரில் உரையாட வேண்டும்.

அவ்வாறு அழைக்கப்படும் உறவுகளையும் உள்ளடக்கியவகையில் ஓர் பொறிமுறையை உருவாக்கி உடனடியாக செயல்படுவதன் மூலமே குறித்த பிரச்சணைக்குத் தீர்வு கான முடியும். இதன் மூலமே அந்த உறவுகளிற்கு உரிய தீர்வினை வழங்க முடியும் இதனால் இவ் விடயத்தில் உடனடியாக ஜனாதிபதி தனது கவனத்தினை செலுத்த வேண்டும். என்றார்