பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலையை குறைத்து பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து தேசிய ஒருமைப்பாட்டிற்க்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஒருதொகை நிதியை கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது.

அந்நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கணேசபுரம் பகுதியிலும் பச்சிலைப்பள்ளி இத்தாவில் பகுதியிலும் உணவு பதனிடும் நிலையங்களை அமைப்பதற்கு முறையே 5 மில்லியன், 3 மில்லியன் ரூபாய்களும் வாழ்வாதார உதவிகளுக்காக 3.75 மில்லியன் ரூபாயும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தென்னம் விதை வழங்கல் செயல்திட்டத்திற்காக 2 மில்லியன் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்க்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.