பட்டதாரிகளுக்கு தனியார் துறையிலும் வாய்ப்பில்லை – சம்பந்தன்

வடக்கு, கிழக்கில் படித்த பட்டதாரிகள் அதிகளவில் இருந்த போதிலும் அவர்களுக்கு அரச துறையிலோ அல்லது தனியார் துறைகளிலோ தொழில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.