வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பரிசீலனையில்! முதலமைச்சர்

வடக்கு மாகாண அமைச்சர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை இறுதி பரிசீலனையில் இருப்பதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 93வது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 93வது அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டத் தொகுதியில்  (25.05.2017) இடம்பெறுகின்றது.

வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதலமைச்சர் விசாரணை குழு அதன் பணிகளை முன்னெடுத்துள்ளது.

அதன் பணிகள் கடந்த 19ஆம் இறுதி அறிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

மேற்படி அறிக்கையினை சபையில் சமர்ப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அடுத்த அமர்வில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.