பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளனர் கூட்டமைப்பினர் .

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதில் பல அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் எதிர்க் கட்சித் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை  சென்று பார்வையிட்டுள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களையே எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சென்று பார்வையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த சந்திப்பில் எம்.ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட சிலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

மேலும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

tt

w3