ஊழல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் நான் தலையிடப் போவதில்லை-இரா. சம்பந்தன்

வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் தாம் தலையிடப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதார்

வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்று நியமிக்கப்பட்ட நிலையில், அந்த குழுவின் அறிக்கை அண்மையில் வடமாகாண சபையில் சமர்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்,

“வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் தாம் தலையிடப் போவதில்லை என கூறியுள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பிலான முடிவுகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனே எடுப்பார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.