நான்கு அமைச்சர்களையும் நீக்க சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

வடக்கு மாகாணத்தின் நான்கு அமைச்சர்களையும் மாற்றுவது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்குவது ஏற்றுக்கொள்ளமுடியாது. இது பொருத்தமற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்வது குறித்து முதலமைச்சர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ள நிலையிலும் நாளை அவதுமுடிவை அறிவிக்கவிருக்கும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனால் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நேற்றையதினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் மாகாணசபை உறுப்பினர்களுடன்முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேச்சாளர் சுமந்திரன், ‘நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. அது பொருத்தமற்ற நடவடிக்கை. இது தொடர்பில் உறுப்பினர்களுக்கிடையிலும் வாக்கெடுப்பு நடாத்தக்கூடாது எனவும் தமது எதிர்ப்பை வெளியிட்டார்.