தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை நோன்புப் பெருநாளில் வலியுறுத்கிறேன் !

தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை நோன்புப் பெருநாளில் வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்ட ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரமழான் பண்டிகை மக்களிடையே சமாதானம் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.