சம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர்

கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு ஒன்றில் தமிழ் மக்களின் தலைமையை விக்னேஸ்வரன் ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இது குறித்து இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். எனினும், “தற்போதைக்கு தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை.

மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைகளுக்கும் இடமில்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.