வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து சிறப்பித்தார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் (12.07.2017) மாலை 3.00 மணிக்கு கல்லூரி அதிபர் பூலோகராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிச் சிறப்பித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள் ஆசிரியருமமான பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் ஜோன்.குயின்ரஸ் ஆகியோரும் மற்றும் கௌரவ விருந்தினர்களாக இப்பாடசாலையின் முன்னாள் அதிபரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மற்றும் மேற்றபடி நிகழ்வில் அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிளிநொச்சி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், இப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பெருமளவானவர்கள் அலையெனத் திரண்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது.