பிரிவுக்கு நாங்கள் இடங்கொடுக்க மாட்டோம்! -சம்பந்தன்

தமிழரசுக்கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு, கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, “ நாங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகத் தான் எங்களை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனிமேலும் அவ்வாறு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பது தான் முக்கியமான விடயம்.
தமிழரசுக் கட்சி தனியாவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது நாடாளுமன்ற குழு, நடவடிக்கை குழுவில் கட்சியின் சார்பில் செயற்படுவதற்காக கட்சியின் தலைவர் என்ற வகையில் என்னையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்டத்தரணியும் அரசியல் சாசனம் தொடர்பாக பல விடயங்களில் ஈடுபடுகின்றவர் என்ற காரணத்தாலும் இருவரையும் தெரிவு செய்தது.