பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் வழக்கு

பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 65, 000 பொருத்து வீடுகள் அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்துமாறு கோரி உச்ச நீதிமன்றில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை சுமந்திரன் தாக்கல் செய்துள்ளார்சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்க்ஸ்ம்பர்க்கின் அக்ஸெல் மிட்டெல் கன்ஸ்ட்ரக்சன் பிரான்ஸ் நிறுவனம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான செலவு, பண விரயம், திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் போன்றவற்றை பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர் என மனுவில் தெரிவித்துள்ளார்.
பொருத்து வீடுகளுக்கான செலவு சீமெந்து கற்களைக் கொண்ட வீடுகளை நிர்மானிப்பதற்கான செலவை விடவும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.