புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.!!

புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.
இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இந்த விட­யம் தொடர்­பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது:

புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை. அரசு துரி­த­மா­கச் செயற்­ப­ட­வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வு விரை­வாக எட்­டப்­பட வேண்­டும். கடந்த அரசு வழி­மா­றிச் சென்­ற­மை­யி­னால், நாட்­டில் மூவின மக்­க­ளும் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னர்.

வடக்கு – கிழக்­கில் தமிழ் தமது அன்­றா­டப் பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக தொடர் போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நாம் கோரி­யது நடக்­க­வில்லை. காணி­கள் கொஞ்­சம் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­தில் அலு­வ­ல­கம் இன்­ன­மும் அமைக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு – கிழக்­கில் மக்­கள் நடத்­தும் போராட்­டங்­க­ளுக்கு மூவின மக்­க­ளும், மூவின அர­சி­யல்­வா­தி­க­ளும் கலந்து கொண்­டுள்­ள­னர். மக்­க­ளின் போராட்­டம் நியா­ய­மா­னது என்­பது இத­னூ­டாக ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. அரசு இத­னைப் புரிந்து கொள்­ள­வேண்­டும். அந்த மக்­க­ளின் பிரச்­சினை உட­ன­டி­யா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டும் – என்­றார்.