போரின் அவலங்களை பொருட்படுத்தாது கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் – சீ.வி

போரின் அவலங்களை பொருட்படுத்தாது எதிர் காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் தெரிவுப் போட்டி நிகழ்வு ஒன்றில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தோல்விகள் யாவும் நாளைய வெற்றிக்குப் படிகளாக அமைய வேண்டும் என குறிப்பிட்டுள்ள முதல்வர், விளையாட்டு நிகழ்வுகளில் வடக்கு மாணவர்கள் வேகமாக முன்னேறிவரும் இன்றைய ஆரோக்கியமான நிலை தொடர தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.