மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் கருத்து கூறவில்லை – சிறிதரன்

மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் பேசியது நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்ட மக்கள் கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் பேசியதாக கூறப்படும் ஒலிவடிவத்தினை நன்றாக அவதானித்துக் கேட்டால் அனைவருக்கும் புரியும். தெறிவற்றதும் குறுக்கீடுகள் செய்யப்பட்டும் அந்த ஒலிவடிவம் காணப்படுகின்றது.

நான் ஒருபோதுமே மலையக மக்களைப் பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் எனது கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.

குறித்த ஊடகவியலாளரை எனது முன் நிறுத்தி உறுதிப்படுத்துங்கள். அதன்பின்னர் எனது நாடாளுமன்ன உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துவிட்டுப் போகின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.