ஜெஃப்ரி ஃபெல்ட்மன்- இரா.சம்பந்தனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளில் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

 

இதன்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து கலந்துரையாடினார்.

 

அத்தோடு, கிழக்கிற்கு விஜயம் செய்து ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரைச் சந்தித்து கிழக்கின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.