sampa

தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும்

இரு பிரதான கட்சிகளும் இணைந்து, தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமெனவும், அதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், தமது வேறுபாடுகளை களைந்து செயற்படுவது அவசியமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது அவசியமில்லையென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருந்தமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், வாக்குறுதி அளித்தமைக்கு அமைவாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.