அரசு துணிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் – சம்பந்தன்

நேற்று பாராளுமன்றம் கூடிய போது தினேஷ் குணவர்தன பாராளுமன்ற ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொன்டிருக்கும் போது எதிகட்சித்தலைவர் இரா. சம்பந்தன் மௌனம் காக்கிறார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அத்தியாவசிய சேவையாக பெற்றோலிய உற்பத்திகள், திரவ எரிவாயு உட்பட அணைத்து எரிபொருள் தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடபப்ட்ட அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையினை அங்கீகரிப்பதற்கான  விவாதத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு சாடினார்.

இதே விவாத்தில் பங்கேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர் M.A,சுமந்திரன் மருத்துவத்துறை, போக்குவரத்துறை மற்றும் பெற்றோலிய துறையினரால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போரட்டங்கள் குற்றவியல் குற்றங்களுக்கு (criminal offences) ஒப்பானவை என்று கூறினார்.

இதே விவாததில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பேசும்போது அரசைக் கவிழ்க்க  வேண்டுமானால் நம்பிக்கையில்லாப்பிரேரணையை கொண்டு வாருங்கள் அதைவிடுத்து அத்தியாவசிய  சேவைகளை முடக்கும் ஜனநாயக விரோத தொழில் செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாதென மஹிந்த தரப்பு பொது எதிரணிக்கு அறிவுரை கூறினார். அத்துடன் அராசாங்கம்  துணிந்து முடிவுகளை எடுத்து ஆட்சியை முன்னெடுக்க  வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தினார்.