தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது நல்லாட்சி அரசு: கூட்டமைப்பு விரக்த்தியில்

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளுக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினாலேயே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் நாட்டின் நலனை கருத்திற்கொண்டு ஏதேனும் திட்டம் ஒன்று கொண்டுவரப்படுகின்றபோது இரண்டு பிரதான கட்சிகளும் அதனை புரிந்துணர்வுடன் ஏற்று செயற்படுவது அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசத்தின் நலத்திற்கான திட்டங்களை கருத்தில் கொண்டு செயற்படுவது காலத்தின் அவசியமாகும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது இந்த ஒரு சூழ்நிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது என்றும் அதன்படியே இந்த அரசின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.