காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் -சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் என இரா­ணுவத் தள­பதி லெப்­டினல் கேணல் மகேஸ் சேன­நா­யக்க தன்­னிடம்  உறு­தி­ய­ளித்­த­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.நேற்­றைய தினம் நண்­பகல் வட­மா­காண முத­ல­மைச்­சரை அவ­ரது வாசஸ்­த­லத்தில் புதிய இரா­ணுவத் தள­பதி மகேஸ் ­சே­ன­நா­யக்க சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இக் கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  மேற்­கண்ட விட­யத்தை குறிப்­பிட்டார்.

கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக  முத­ல­மைச்சர் மேலும் தெரி­விக்­கையில்,

சந்­திப்பில் இரா­ணுவத் தள­பதி ஓர் விட­யத்தை குறிப்­பிட்­டி­ருந்தார். அதா­வது மயி­லிட்டி துறை­மு­கத்தை விரைவில் திருப்பி பெற்றுத்தரு­வ­தாக கூறி­யி­ருந்­த­தின் ­படி அதனை மீள பெற்­று­த்தந்­து­விட்­ட­தாக கூறினார்.

இதன்­போது நான் அவ­ரிடம் சில விட­யங்­களை எடுத்­துக்­கூ­றினேன்.  தோல­கட்டி பகு­தியில் பண்ணை பகு­திகள் இன்­னமும் விடு­விக்­கப்­ப­டாமல் உள்­ளன. அதற்­கான வீதி­யா­னது 2 கிலோ ­மீற்றர் தூரம் உள்ள நிலையில்  அதனை விடு­விக்­காது இருப்­பதால்  அதற்கு பதி­லாக 5 கிலோ மீற்றர் தூரம் சுற்றி செல்ல வேண்­டி­யுள்­ள­தாக பாதி­ரி­யார்கள் என்­னிடம் கூறிய விட­யத்தை இரா­ணுவ தள­ப­தி­யிடம் நான் கூறி­யி­ருந்தேன். இது தொடர்­பாக அவர் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக  தெரி­வித்தார்.

மேலும் தற்­போது யுத்த காலத்தில் இருப்­பது போன்­றல்­லாது யுத்தம் முடி­வ­டைந்த பின்­ன­ரான காலத்தில் இரா­ணுவம் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும், மக்­க­ளுக்கு நன்மை பயக்­கக்­கூ­டிய விதத்தில் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பாக தாம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கூறி­வ­ரு­வ­தாக என்­னிடம் இரா­ணுவ தள­பதி கூறினார்.

இத­னை­விட காணி­வி­டு­விப்பு தொடர்­பாக நல்­ல­தொரு செய்தி கிடைக்­கு­மென அவர் கூறி­ய­துடன்  கேப்­பா­ப்புலவு காணி விடு­விப்பு தொடர்பாக சுவாமிநாதன் ஒரு தொகை பணத்தை தருவதாக கூறியுள்ள நிலை யில் படையினர் அப் பகுதியை விடுவித்து விடுவார் கள்  என தான்  நம்புவதாகவும் இராணுவத் தளபதி என்னிடம் சுட்டிக்காட்டினார் என்றார்.