தமிழர்கள் ஒற்றுமை பலம் பெறவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

எமது இனத்­தின் ஒற்­றுமை இன்­னும் பல­ம­டைய வேண்­டும். தமி­ழர்­கள் ஆகிய எமது கலாசா­ரம்,பண்­பா­டு­கள் மற்­றும் பழக்க வழக்­கங்­கள் ஆகி­ய­வற்றைப் பேணிப் பாது­காக்க வேண்­டி­யது அனை­வ­ரி­ன­தும் கட­மை­யா­கும்.

இவ்­வாறு இலங்­கை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
உலக தமிழ் இயக்­கப் பண்­பாட்டு இயக்­கத்­தின் 13ஆவது பன்­னாட்டு மாநாட்­டின் இரண்­டாம் நாள் நிகழ்வு யாழ்ப்­பா­ணம் ரில்கோ உணவு விடு­தி­யில் நேற்று நடை­பெற்­றது. அதில் முதன்மை விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்த­தா­வது-;

நாம் உல­கத்­தின் எந்­தப் பாகத்­தில் வாழ்ந்­தா­லும் தமி­ழர்­கள் என்ற வகை­யில் ஒரு குடும்­ப­மாக அனை­வ­ரும் ஒற்­று­மை­யு­டன் வாழ வேண்­டும். நாங்­கள் பாரம்­ப­ரி­ய­மா­ன­வர்­கள். அதைக் காக்க வேண்­டிய பொறுப்பு அனை­வ­ருக்­கும் இருக்­கின்­றது.

இலங்­கை­யில் வாழும் தமிழ் மக்­கள் பல கஷ்டங்­களை அனு­ப­வித்து வாழ்ந்­த­வர்­கள் – வாழ்ந்து கொண்­டும் இருக்­கின்­ற­னர். எமது மக்­க­ளில் அரை­வாசி வீத­மான மக்­கள் இங்கு இல்லை. ஏறத்­தாழ இலங்கைத் தமி­ழர்­கள் பல புலம்­பெ­யர் நாடு­க­ளில் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

கல­வ­ரங்­கள் கார­ண­மா­க­வும் உள்­நாட்டுப் போர் கார­ண­மாகவும் சொந்த மண்­ணில் வாழ முடி­யாத நிலை ஏற்­பட்­டது. தற்­போது நாட்­டில் ஆட்சி மாற்­றம் ஒன்று ஏற்­பட்டு கூட்­டாட்சி நடை­பெ­று­கின்­றது. நாமும் புதிய பாதை­யில் பய­ணிக்க முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றோம்.

புதிய அர­ச­மைப்பு ஒன்றை உரு­வாக்கி ஒரு சமத்­து­வத்தை ஏற்­ப­டுத்த உத்­தே­சித்து வரு­கின்­றோம். அது நிறை­வேற வேண்­டும். புதிய அர­ச­மைப்­பில் அனை­வ­ர­தும் பங்கு இருக்­கின்­றது. தமி­ழர்­கள் என்ற வகை­யில் நாம் சுய மரி­யா­தை­யு­டன் சமத்­து­வத்­து­டன் வாழக்­கூ­டிய வகை­யில் அது அமைய வேண்­டும்.

நாம் அநீ­தி­யாக எத­னை­யும் கேட்க முற்­ப­டக் கூடாது. நாங்­கள் நீதி­யாகப் பெறக்­கூ­டிய அனைத்­தை­யும் பெற­வேண்­டும். அதற்கு அனை­வ­ரும் முன்­வ­ர­வேண்­டும். போரால் மக்­கள் பல கஷ்டங்­க­ளுக்கு மத்­தி­யில் வாழ்­கின்­ற­னர்.

போரால் எத்­த­னையோ பெண்­கள் கண­வனை இழந்து வித­வை­க­ளாக ஆக்­கப்­பட்­டுள்­ள­னர். சகோ­தர, தாய், தந்­தை­யரை இழந்­துள்­ள­னர். தங்­க­ளின் வாழ்க்­கை­யைக் கொண்டு நடத்த மிக­வும் சிர­மப்­ப­டு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு உதவ வேண்­டி­யது எமது அனை­வ­ர­தும் கட­மை­யா­கும்.

அந்தப் பணி­க­ளில் நாம் ஈடு­ப­ட­வேண்­டும். அவ்­வா­றன உத­வி­களைச் செய்ய வேண்­டும். இந்த மாநா­டு­கள் இன்­னும் உயர்ந்து தொடர்ச்­சி­யாக நடை­பெ­ற­வேண்­டும். தமி­ழர்­க­ளா­கிய எமது இனத்­தின் ஒற்­றுமை மேலும் பல­ம­டைய வேண்­டும் – – என்­றார்.