பிர­தேச வாதம், மத­வா­தம் பேசும் நேரம் இது­வல்ல – அமைச்சர் ப.சத்­தி­யலிங்கம்

‘அண்­மைக்­கா­ல­மாக சில ஊட­கங்­க­ளி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் வரு­கின்ற செய்­தி­கள் கொடிய போரால் நொந்து போன மலை­யக உற­வு­க­ளின் மனதை மேலும் நோக­டிப்­ப­தாக அமைந்­துள்­ளன. பிர­தேச வாதம், மத­வா­தம் பேசும் நேரம் இது­வல்ல.

ஏற்­க­னவே அர­சி­யல் ரீதி­யாக முரண்­பட்ட சமூ­க­மா­கக் காணப்­ப­டும் தமிழ் பேசும் மக்­கள் இவ்­வா­றான குறு­கிய வட்­டத்துக்குள் பிரிந்து சென்­றால் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வு­நோக்­கிய பய­ணத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­வி­டும்’’ என வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ப.சத்­தி­யலிங் கம் ­ தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

உல­கின் ஏனைய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் எமது நாட்­டில் இன­ரீ­தி­யான வேறு­பாடு குறைந்­த­ள­வி ­லேயே காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக மொழி ரீதி­யாக இரண்டு தேசிய இனங்­களே காணப்­ப­டு­கின்­றன.

எனி­னும் சுதந்­தி­ரத்துக்கு பின்­னர் எண்­ணிக்­கை­யில் அதி­க­ள­வி­லான சிங்­கள தேசி­ய­வா­தி­கள் தமிழ் மக்­களை இரண்­டாம் தர குடி மக்களாகவே நடாத்தி வந்­த­னர். இதன் பிரதிபலிப்­பு­தான் நாட்­டில் ஏற்­பட்ட உரி­மைப்­போ­ராட்­ட­மும் அதன்­பால் ஏற்­பட்ட இழப்­ப­க­ளும்.

வடக்­கு–கி­ழக்­கைப் பொறுத்­தரை ஈழ­வி­டு­த­லைப்­போ­ராட்­டத்­தில் மலை­ய­கத் தமிழ் மக்­களும் பாரிய பங்­க­ளிப்­பைச் செய்­துள்­ள­னர். தமிழ்­மக்­க­ளுக்­கான அற வழிப் போராட்­டத்­தி­லும் சரி, ஆயு­தப்­போ­ராட்­டத்தி­ லும் சரி ஒடுக்­கப்­பட்ட தமி­ழர்­கள் என்­ப­தன் அடிப்­டை­யில் ஈழ­வி­டு­தலை இயக்­கங்­க­ளு­டன் இணைந்து மலையகத் தமிழர்களும் போரா­டி­யுள்­ள­னர்.

அவர்­க­ளைப் பற்­றிய விரும்­பத்­த­காத, அரு­வ­ருப்­பான விமர்­ச­ னங்­க­ளைச் சிலர் முன்­வைப்­ப­ தா­னது மன­வே­த­னை­யைத் தரு­கி­றது –என்­றார்.

புலம்­பெ­யர் தமி­ழர் ஒரு­வர் மல­ய­கத் தமிழ் மக்­களை இழிவுபடுத்­திப் பேசிய காணொலி ஒன்று அண்­மை­யில் சமூக வலைத்­த­ளங்­க­ளில் தீயா­கப் பர­வி­யது. அந்­தக் காணொளி கண்­ட­னங்­க­ளுக்­கும் உள்­ளாக்­கப்­பட்­டது. அது தொடர்­பா­கப் பல­ரும் அதி­ருப்தி தெரி­வித்­தி­ருந்­த­னர்.