கிளிநொச்சி வலய கல்விப்பணிமனைக்கு தற்காலிக காணியை நிரந்தரமாக வழங்க தீர்மானம்

கிளிநொச்சி கல்வி வலயம் தற்காலிகமாக இயங்கி வரும் காணியை நிரந்தரமாக வலயக் கல்விப்பணிமனைக்கு வழங்குவது என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தற்போது வலயக் கல்விப்பணிமனை இயங்கும் காணி பணிமனைக்குச் சொந்தமானது அல்ல. அதனை வலயக்கல்வி பணிமனைக்கு கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், கிளிநொச்சி கல்வி வலயம் தற்போது இயங்கும் தற்காலிக காணியை நிரந்தரமாக வலயக் கல்விப்பணிமனைக்கு வழங்குவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி விடயம் சார்பில் வலயக் கல்விப்பணிப்பாளர் யோன் குயின்ரஸ் முன்வைத்த விடயத்தை ஆராய்ந்தபோதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.