யுத்த வடுக்களால் பலர் நடைப்பிணங்களாக உலாவி வருகின்றனர் : சீ.வி விக்னேஸ்வரன்!

நீண்ட கால யுத்தத்தின் காரணமாக எம்மவர்களில் பலர் சோகச் சுமைகளைச் சுமந்த வண்ணம் நடைப்பிணங்களாக எம்மிடையே உலாவி வருகின்றனர். இவர்களில் பலருக்கு உளவியற் தாக்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டிடம் மற்றும் வைத்திய நிபுணர்களின் விடுதி ஆகியவை நேற்றைய தினம் (28) காலை வைபவ ரீதியாக வடக்கு முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறிள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அவற்றை குறைப்பதற்கான அல்லது குணப்படுத்துவதற்கான உளவியல் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியம்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல சிகிச்சைப் பிரிவிற்கான புதிய கட்டடம் மற்றும் வைத்திய நிபுணர்களின் விடுதி ஆகியவற்றின் கட்டடங்களை வைபவ ரீதியாக திறந்து வைப்பதில் மகிழ்ச்சி.

உளநல சிகிச்சைப் பிரிவொன்று அதன் முக்கியத்துவம் கருதி சரியான நேரத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமானது.

நீண்ட கால யுத்தத்தின் காரணமாக எம்மவர்களில் பலர் சோகச் சுமைகளைச் சுமந்த வண்ணம் நடைப்பிணங்களாக எம்மிடையே உலாவி வருகின்றனர்.

அவற்றை குறைப்பதற்கான அல்லது குணப்படுத்துவதற்கான உளவியல் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியமாகின்றன.

இன்று இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற வன்முறைகள், பாலியல் வன்முறைகள், சமூக வன்முறை ஆகியனவும் குடும்ப வன்முறைகளும் உளவியல் தாக்கங்களின் இன்னோர் வடிவம் எனவே கொள்ளப்பட வேண்டியுள்ளன.

அண்மையில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் சூட்டுக்கொலை தொடர்பாக கொலையாளி என சந்தேகப்பட்டவரின் வாக்கு மூலத்தில் தனது மைத்துனர் தன்னைச் ‘சுடு பார்ப்போம்’ என்றார். ‘சுட்டுவிட்டேன்’ எனத் தெரிவித்திருக்கின்றார்.

இதுவும் ஏதோ ஒரு வித தாக்கத்தின் பிரதிபலிப்போ என்று எண்ண வேண்டியுள்ளது. ஆனால் இது அவருக்கு யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்துக் கூறிய கூற்றாகவும் இருந்திருக்கலாம்.

அவ்வாறு கூறினால் உள நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி வழக்கைத் திசை திருப்ப முடியும் என்றும் எண்ணியிருக்கலாம்.

எது எவ்வாறு இருப்பினும் எம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மனத்தாக்கங்களுக்கான தீர்வுகள் வெறுமனே சுகாதாரத் திணைக்களத்தால் மட்டும் தீர்த்துவிட முடியாதவை.

பொதுமக்கள் பங்களிப்பு, சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பு, அரசியல் பின்புலம் ஆகிய கூட்டு முயற்சிகளுடன் உரிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது இன்றியமையாதது.

அந்த வகையில் இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கும் உளநல சிகிச்சைப் பிரிவு சிறப்பாக செயற்பட வேண்டும் என வாழ்த்துகின்றேன் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.