இலங்கையில் குற்றவாளிகள் இனிமேல் தப்பிக்கக்கூடாது – எதிர்கட்சி தலைவர்

இலங்கையில் நடைபெறும் குற்றங்களுக்கான தண்டனையில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் போனோர் தொடர்பாக கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.