அரசியல் கைதிகள் விவகாரம்! சிறீதரனின் குற்றச்சாட்டுக்கு சுவாமிநாதன் பதில்

அரசியல் கைதிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை துரிதமாக விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அரசியல் கைதிகள் விடயத்தில் அமைச்சர் சுவாமிநாதன் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,72 அரசியல் கைதிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை துரிதமாக விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் எனது கடமையை நான் செய்து விட்டேன்.மேலும், அரசியல் கைதிகள் விடயம் குறித்து இரு தடவைகள் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி உள்ளேன் என குறிப்பிட்டார்.

மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துவேன் என்றும், இவற்றுக்கு இரண்டு வாரங்களுக்கு உட்பட்ட தவணைகளே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.