ஜகத் ஜயசூரிய இனப்படுகொலையாளி! பிரபாகரனின் ஆட்சியில் வடக்கின் நிலை: நாடாளுமன்றில் உரை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வந்துள்ள நிலையில் நீதியான முறையில் விசாரணைகள் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய பிரேசிலில் இருந்து தப்பியோடி வந்துள்ளார். வன்னி கட்டளை தளபதியாக இருந்த ஜகத் ஜயசூரிய ஒரு இனப்படுகொலையாளி ஆவார்.புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முள்ளிவாய்க்கால் உள்­ளிட்ட பல பகுதிகளில் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கான பூரண ஆதாரங்கள் உலகளவில் உள்ளன.இந்த நிலையில், இவருக்கு எதிராக சாட்சியமளிக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வந்துள்ளார். ஆகவே ஜகத் ஜயசூரிய தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் செய்ய வேண்டும் என வளியுறுத்தியுள்ளார்.மேலும், தற்போது தான் வடக்கில் போதைவஸ்து கடத்தப்படுவதாக கூறப்படுகின்றது. வாள் ­வெட்டு நடத்தப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.ஆனால் பிரபாகரன் வடக்கை ஆட்சி செய்யும் போது வடக்கில் கஞ்சா பாவனை இருந்ததா? வாள்வெட்டு கலாச்சாரம் இருந்ததா? இரவிலும் பெண்கள் சுதந்திரமாக பயணிக்க முடிந்தது. வடக்கில் ஒரு நீதியான ஆட்சி இருந்தது. ஒரு கட்டுப்பாட்டுக்குள் வடக்கு காணப்பட்டது.எனினும் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலைமைகளை ஆராய்ந்து பாருங்கள். அனைத்தும் தலைகீழாக திரும்பியுள்ளன. பிரபாகரனின் ஆட்சியை தெற்கில் பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.