20ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதெனவும், திருத்தங்கள் செய்யப்படும் பட்சத்தில் அதனை பரிசீலிக்கலாம் என வட மாகாணசபை தீர்மானம்

20ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதெனவும், திருத்தங்கள் செய்யப்படும் பட்சத்தில் அதனை பரிசீலிக்கலாம் என வட மாகாணசபை தீர்மானம் எடுத்துள்ளது.மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒரு சந்தர்ப்பத்தில் நடத்துவதற்கான 20ஆவது திருத்தச்சட்டம் கடந்த 04ஆம் திகதி வடமாகாண சபையில் ஆராயப்பட்ட நிலையில், இன்றைய தினம் இறுதித் தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.இதற்கமைய 20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இந்த விடயம் இன்று சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் 20ஆவது திருத்தச் சட்டத்தை இப்போதுள்ள நிலையில் நிராகரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதனை வட மாகாணசபை பரிசீலிக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இந்த தீர்மானம் உடனடியாக ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.