வட- கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புக்கு இடைக்­கால அறிக்­கை­யில் இட­மே­யில்லை

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தயா­ரா­கி­விட்ட நிலை­யில், வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புத் தொடர்­பில் அதில் எந்­த­வி­த­மான இறு­தித் தீர்­மா­ன­மும் கூறப்­ப­ட­வில்லை என்று ‘உத­யன்’ அறிந்­தான்.

அது­போன்றே மதச் சார்­பற்ற நாடு என்ற விட­யத்­தி­லும் ஒரு­மித்த நிலைப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

இலங்­கை­யின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்­காக நாடா­ளு­மன்­றம் அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றப்­பட்­டது. அத்­து­டன் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­காட்­டல் குழு­வும் நிய­மிக்­கப்­பட்­டது.

நாடா­ளு­மன்­றத்­தில் அங்­கம் வகிக்­கும் அனைத்து அர­சி­யல் தரப்­பு­க­ளை­யும் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்தி அந்­தக் குழு அமைக்­கப்­பட்­டது. அதன் இடைக்­கால அறிக்கை தயா­ரா­கி­விட்­டது.

எதிர்­வ­ரும் 21ஆம் திகதி அது நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அடுத்த மாதம் அது விவா­தத் துக்கு எடுக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் தெரி­கி­றது.

அரசமைப்பு உரு­வாக்­கம் குறித்து ஆராய அர­ச­மைப்­புச் சபை­யால் நிய­மிக்­கப்­பட்ட 6 உப­கு­ழுக்­க­ளும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வால் நிய­மிக்­கப்­பட்ட 7 ஆவது குழு­வும் ஏற்­க­னவே தங்­க­ளது அறிக்­கை­களை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­து­விட்­டன.

தற்­போது தயா­ரா­கி­யி­ருக்­கும் இடைக்­கால அறிக்­கை­யில் உள்ள விட­யங்­கள் மெல்­லக் கசிந்து வரு­கின்­றன.

இந்த அறிக்­கைக்­கான பின்­னி­ணைப்­புக்­களை கட்­சி­கள் கடந்த 31ஆம் திக­திக்கு முன்­பா­கக் கொடுத்­துள்ள நிலை­யில் இடைக்­கால அறிக்கை பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்­னர் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கை­யில் பெரி­ய­ள­வில் மாற்­றங்­கள் செய்­யப்­ப­டாத அறிக்­கையே மீண்­டும் தயா­ராகி இருக்­கின்­றது என்று உத­யன் நம்­ப­க­மாக அறிந்­தது.

அந்த அறிக்­கை­யில் மாகா­ணங்­க­ளின் இணைப்­புத் தொடர்­பில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. குறிப்­பாக வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புத் தொடர்­பில் எந்­தத் தீர்­மா­ன­மும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

மாக­ணங்­கள் இணைக்­கப்­பட வேண்­டும் என்று ஒரு தரப்­பும், மாகா­ணங்­கள் இணைக்­கப்­ப­டவே கூடாது என்று இன்­னொரு தரப்­பி­ன­ரும், தற்­போ­துள்ள அர­ச­மைப்பு நடை­மு­றைக்கு அமை­வாக மக்­க­ளின் கருத்தை அறிந்த பின்­னர் மாகா­ணங்­கள் இணைக்­கப்­ப­ட­லாம் என்று மற்­றொரு தரப்­பி­ன­ரும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இந்த விட­யத்­தில் ஒரு­மித்த நிலைப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அத­னால் மூன்று தரப்­பி­ன­ரும் கூறிய கருத்­துக்­கள் இடைக்­கால அறிக்­கை­யில் அப்­ப­டியே குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­னவே தவிர இணைப்­புக் குறித்த முடிவு எது­வும் இல்லை.

மதச் சார்­பற்ற நாடு என்ற விட­யத்­தி­லும் அதா­வது பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­க­வேண்­டும் என்ற விட­யத்­தி­லும் இணக்­கம் எட்­டப்­ப­ட­வில்லை.

மாறு­பட்ட கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போ­தைய அர­ச­மைப்­பில் உள்­ள­வாறே பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை தொட­ர­வேண்­டும் என்று ஒரு தரப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. மதச்­சார்­பற்ற நாடாக இருக்க வேண்­டும் என்று மற்­றொரு தரப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஒரு மித்த நிலைப்­பாடு எட்­டப்­ப­டா­மை­யி­னால் இரு தரப்­பி­ன­ரது கருத்­துக்­க­ளும் இடைக்­கால அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் அதி­கா­ரம் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று இடைக்­கால அறிக்­கை­யில் குறிப்­பிட்­ட­போ­தும் அந்த அதி­கா­ரம் எந்த அள­வில் வழங்­கப்­பட வேண்­டும் என்­பது தொடர்­பில் இடைக்­கால அறிக்­கை­யில் எது­வும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­றும் உத­யன் அறிந்­தான்.