“புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசிடமும் தெளிவுபடுத்தியுள்ளோம்.”
– இவ்வாறு தெரிவித்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
“புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் காலம், பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் காலம் என்பன குறித்து எங்களுக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது. அவை உரிய முறைப்படி நடக்குமென எதிர்பார்க்கிறோம். ஆனாலும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நாங்கள் ஏலவே தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.

Previous Postஇடைக்கால அறிக்கை: பரிந்துரைகளைப் பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்! – சுமந்திரன்
Next Postஇடைக்கால அறிக்கையுடன் மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றார் சம்பந்தன்!