அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும்

ஒரு நாட்­டி­லி­ருந்து இன்­னொரு நாட்­டுக்கு அடைக்­க­லம் தேடி வரு­ப­வர்­களை விரட்­டி­ ய­டிப்­பது பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­தின்­படி மாபெ­ரும் குற்­ற­மா­கும்.
மியன்­மார் நாட்­டில் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து அங்­கி­ருந்து அடைக்­க­லம் தேடி இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­க­ளைப் பாது­காப்­பது அர­சின் கட­மை­யா­கும்”
இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.
கொழும்­பில் ரோஹிங்ய முஸ்­லிம் மக்­கள் மீது பௌத்த பிக்­கு­மா­ரும், சிங்­கள இன­வா­தி­க­ளும் நடத்­திய அட்­டூ­ழி­யங்­கள் குறித்து கருத்­துத் தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
நாட்­டில் இன­வா­தச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டும் சிலர், அக­தி­க­ளாக இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­களை விரட்­டி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­பட்­டுள்­ள­னர். இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இந்த நட­வ­டிக்கை ஐ.நாவின் பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­துக்கு முர­ணா­னது.
இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­க­ளுக்கு ஏதி­லிக் குடி­யி­ருமை வழங்கி அவர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பது அர­சின் கட­மை­யா­கும். இந்­தக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான உரிய நட­வ­டிக்­கையை அரசு எடுக்­க­வேண்­டும். அந்த மக்­க­ளுக்கு மனி­த­நே­யத்­தின் அடிப்­ப­டை­யில் உதவ வேண்­டும்.
நாட்­டில் இந்த ஆட்­சி­யி­லும் இடை­இ­டையே இன­வா­தச் செயற்­பா­டு­கள் அரங்­கே­று­கின்­றன. நாட்­டின் அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் குழப்­பி­ய­டிக்­கும் இந்­தச் செயற்­பா­டு­க­ளுக்கு அரசு உட­ன­டி­யாக முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும் என்­றார்.