அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – பீரிசிடம் சம்பந்தன் கோரிக்கை

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தவறானது என்று அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார் என்று, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் தாம் இதற்கு சாட்சியாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான படம் ஒன்றையும் அவர் கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.