மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார் எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார் எதிர்க்கட்சி தலைவர்

இதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி அவர் விஜயம் மேற்கொள்வார் என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரது 125ஆவது ஆண்டு பிறந்த தின நினைவையொட்டி சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கே அவர் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு எதிர்வரும் 07ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறவிருப்பதாக அந்த நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.