அரசியல் கைதிகள் விடயத்தில் சம்­பந்­தன் காட்டம்

பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதி­கள் தனிப்­பட்ட முறை­யில் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை.

அவர்­கள் அத்­த­கைய செயல்­க­ளில் ஈடு­பட்­ட­மைக்கு ஓர் பின்­னணி அர­சி­யல் பரி­மா­ணம் இருக்­கின்­றது. அத­னைப் புரிந்து கொள்­ளுங்­கள்.எனவே அர­சி­யல் கைதி­கள் என்று எவ­ரும் இல்லை என்று கூற­மு­டி­யாது.

இவ்­வாறு நேற்று வலி­யு­றுத்­தி­னார் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீது அவர் உரை­யாற்­றி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஜே.வி.பியி­னர் கிளர்ச்சி­யில் ஈடு­பட்­டார்­கள். அவர்­கள் பொது­மன்­னிப்­பின் கீழ் விடு­விக்­கப்­பட்­டார்­கள். அன்று அவ்­வா­றான கிளர்ச்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு அர­சி­யல் பரி­மா­ணம் ஒன்று இருந்­தது.

அந்த அர­சி­யல் பரி­மா­ணத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே அவர்­கள் தொடர்­பில் முடிவு எடுக்­கப்­பட்­டுத் தீர்வு வழங்­கப்­பட்­டது.

தற்­போது நல்­லி­ணக்­கம் தொடர்­பா­கப் பேசப்­ப­டு­கின்­றது. பயங்­கா­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­கள் அனை­வ­ரை­யும் விடு­விப்­ப­தா­னது அந்த நல்­லி­ணக்­கத்­தின் அடிப்­ப­டை­யாக அமை­யும்.

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்ட மூவ­ரின் வழக்­கு­கள் வவு­னி­யா­வி­லி­ருந்து அநு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. அதற்­குச் சாட்­சி­க­ளின் பாது­காப்பே கார­ண­மா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

உண்­மை­யி­லேயே இவர்­க­ளின் வழக்­குளை மாற்­றாது சாட்­சி­க­ளுக்கு பாது­காப்­பினை வழங்­கி­யி­ருக்க முடி­யும். ஆனால் அவ்­வாறு செய்­யப்­ப­ட­வில்லை.

வழக்­கு­கள் திடீ­ரென மாற்­றப்­பட்­டுள்­ள­மை­யால் அவர்­க­ளும், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­ற­னர்.

வழக்­கு­கள் மாற்­றப்­பட்­டுள்ள மூவர் தொடர்ச்­சி­யாக உணவு ஒறுப்பை மேற்­கொண்­டுள்­ள­னர். வழக்­கு­கள் மாற்­றப்­பட்­ட­மை­யா­னது அர­ச­மைப்­புக்­கும் முர­ணா­னது.

இந்த விட­யத்­தில் அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. இந்­தப் பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டிய காலம் வந்­து­விட்­டது.

அர­சி­யல் கைதி­கள் எவ­ரும் இல்லை என்று அர­சி­னால் கூற­மு­டி­யது. இந்த நாட்­டில் மோதல் ஏற்­பட்­ட­மை­யால்­தான் அவர்­கள் தடுப்­புக்­கா­வ­லில் இருக்­கின்­றார்­கள்.

இந்த நபர்­கள் அர­சி­யல் ரீதி­யான செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­மை­யால்­தான் இவ்­வாறு தடுப்­புக்­கா­வ­லில் இருக்க வேண்­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளது.

அர­சி­யல் கைதி­கள் விட­யம் தனியே சட்­டப்­பி­ரச்­சி­னை­யல்ல அதனை அர­சி­யல் ரீதி­யா­கவே தீர்க்­க ­வேண்­டும். அரசு இந்த விட­யத்­தினை தீவி­ர­மற்ற பிரச்­சி­னை­யா­கப் பார்க்­கக்­கூ­டாது.

அரசு அத்­த­கைய மனோ­நி­லை­யில்­தான் உள்­ளது என்றே தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் தமிழ் மக்­க­ளும் எண்­ணு­கின்­றார்­கள். அரசு இப்­ப­டிச் செயற்­ப­டு­வ­தால் நாங்­க­ளும் மக்­கள் மத்­தி­யில் செல்­வாக்­கி­ழந்து வரு­கின்­றோம்.

வழக்­கு­கள் மாற்­றப்­பட்­டமை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அர­ச­மைப்­பின் மூலம் எந்­த­வொரு குடி­ம­க­னுக்­கும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உரிமை மறுக்­கப்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது- என்­றார்.