ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதிலே அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!

தேர்­த­லில் இழந்த பத­வி­க­ளை­யும், அர­சி­யல் கதி­ரை­க­ளை­யும் மீண்­டும் பிடிப்­ப­தற்­காக அர­சி­யல் கைதி­க­ளின் உயிரைப் பயன்­ப­டுத்தி ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதில் அர­சி­யலை செய்ய வேண்­டாம் என்று கஜேந்­தி­ர­கு­மார் அணி­யி­ன­ரைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பில் பேசி­வ­ரும் கஜேந்­தி­ர­கு­மார் இத்­தனை ஆண்­டு­க­ளில் ஒரு தட­வை­யா­வது சிறைச்­சா­லைக்­குச் சென்று அவர்­க­ளைச் சந்­தித்­துக் கதைத்­துள்­ளாரா? தமிழ் மக்­க­ளைச் சாவ­டித்து அதில் அர­சி­யல் இலா­பம் காணும் செயல்­களை உட­ன­டி­யாக இவர்­கள் கைவிட வேண்­டும்.

இவ்­வாறு ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம்.

‘‘அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வின் யாழ்ப்­பா­ணப் பய­ணத்­தின்­போது நீதி­மன்­றம் போராட்­டங்­க­ளுக்­குத் தடை­வி­தித்து விட்­ட­தாக வந்த பத்­தி­ரி­கைச் செய்­தி­யைப் பார்த்து பம்­மிய கஜேந்­தி­ர­கு­மார், நான் போராட்­டக்­க­ளத்­துக்கு வந்­து­விட்­டேன் என்று அறிந்­த­வு­டன் ஓடி வந்து ஆட்­க­ளோடு ஆட்­க­ளாக நின்று விட்டு நான் மைத்­தி­ரி­யு­டன் இர­க­சிய தொடர்­பில் இருப்­ப­தாக ஆதா­ர­ மில்­லாத குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக் கின்­றார்’’ என்­றும் அவர் கூறி­னார்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விட­யத்­தில் சிவா­ஜி­லிங்­கம் அர­சுக்­குச் சார்­பா­கச் செயற்­பட்டு வரு­கி­றார் என அகில இலங்கை தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வ­ரு­மான கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் நேற்­று­முன்­தி­னம் குற்­றஞ்­சு­மத்­தி­யி­ருந்­தார்.

இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில், யாழ்­பாடி விருந்­தி­னர் விடு­தி­யில் நேற்று பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார் சிவா­ஜி­லிங்­கம்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆளு­நரைக் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சந்­தித்து நில­மையை எடுத்­துக் கூறி அரச தலை­வரை இந்த விட­யத்­தில் உட­ன­டி­யா­கத் தலை­யிட்­டுத் தீர்வு காணு­மாறு கோரி­னோம்.

அரச தலை­வர் இங்கு வரும்­போது அவ­ருக்கு எதி­ராகக் கவ­ன­வீர்ப்புப் போராட்­டம் மேற்­கொள்­ள­வுள்­ளோம், அதன் பின்­னர் வேண்­டு­னா­மால் நாம் அவ­ரு­டன் கதைக்­க­லாம் என்­றேன்.

இது­தான் ஆளு­ந­ருக்­கும் எமக்­கும் இடை­யில் சந்­திப்­பில் பேசப்­பட்­டது. இதை­ய­றி­யாத சிலர் பொய்­யாக நான் பல மணி நேர­மாக ஆளு­ந­ரு­டன் உரை­யா­டி­னேன் என்­கின்­ற­னர்.

நானும் ஆளு­ந­ரும் பல மணி­நே­ரம் கதைக்க நாங்­கள் என்ன காத­லர்­களா?
தேர்­த­லில் இழந்த பத­வி­க­ளை­யும், அர­சி­யல் கதி­ரை­க­ளை­யும் மீண்­டும் பிடிப்­ப­தற்­காக அர­சி­யல் கைதி­க­ளின் உயிரைப் பயன்­ப­டுத்தி ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதில் அர­சி­யல் செய்யவேண்­டாம் என்று கஜேந்­தி­ர­கு­மார் அணி­யி­ன­ரைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பில் பேசி­வ­ரும் கஜேந்­தி­ர­கு­மார் இத்­தனை ஆண்­டு­க­ளில் ஒரு தட­வை­யா­வது சிறைச்­சா­லைக்­குச் சென்று அவர்­க­ளைச் சந்­தித்துக் கதைத்­துள்­ளாரா? தமிழ் மக்­க­ளைச் சாவ­டித்து அதில் அர­சி­யல் இலா­பம் காணும் செயல்­களை உட­ன­டி­யாக இவர்­கள் கைவிட வேண்­டும்.

பொது இடங்­க­ளில் சம்­பந்­த­னை­யும் சுமந்­தி­ர­ னை­யும் தூற்­று­வதை விட இவ­ருக்கு அர­சி­யல் தெரி­யுமா? தனது பேச்­சுக்­க­ளில் இந்த இரு­வ­ரின் பெயர்­க­ளை­யும் இழுக்­காது அர­சி­யல் கதைக்­கத் தெரி­யாது அவ­ருக்கு.

நாம் மறக்­க­வில்லை

கஜேந்­தி­ர­கு­மார் கடந்த கால நிகழ்­வு­களை மறந்து அல்­லது மறைத்­துப் பொய்­யான பரப்­பு­ரை­களை மக்­கள் மத்­தி­யில் முன்­வைத்து வரு­கின்­றார். ஆனால் தமிழ் மக்­கள் அனைத்­தை­யும் அறிந்து வைத்­துள்­ள­னர்.

இலங்­கை­யில் உள்­நாட்டுப் போர் இடம்­பெற்ற 2009ஆம் ஆண்டு மே மாத காலப்­ப­கு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முக்­கிய தள­ப­தி­கள் வெள்­ளைக்­கொ­டி­யு­டன் சர­ண­டைந்­த­னர்.

இந்த விட­யம் தொடர்­பில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வின் சகோ­த­ரர் பசி­லு­டன் இர­க­சி­ய­மாக அலை­பே­சி­யில் உரை­யா­டிய கஜேந்­தி­ர­கு­மார் இது தொடர்­பா­கவோ அல்­லது சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பிலோ ஐ.நா. சபை­யில் ஒரு தட­வை­யே­னும் சாட்­சி­ய­ம­ளிக்­காமை பலத்த சந்­தே­கங்­களை எழுப்­பு­கின்­றது.

இறு­திப் போரில் நடந்­த­வற்றை மறைத்­து­வ­ரும் கஜேந்­தி­ர­கு­மார் ஜெனி­வா­வில் நாம் உரை­யாற்­றும்­போது பின்­வ­ரி­சை­யில் ஒளித்து இருந்து வேடிக்கை பார்த்­து­விட்டு இங்கு வந்து தேசி­யம் கதைத்து மக்­களை முட்­டா­ளாக்­கும் செயல்­க­ளையே செய்­து­வ­ரு­கின்­றார். மக்­கள் எல்­லா­வற்­றை­யும் அறிந்து வைத்­துள்­ள­னர்.

இங்கு இலங்கை அர­சுக்கு எதி­ரா­கக் கொக்­க­ரித்து வரும் அவர், ஒரு நாளா­வது பன்­னாட்டு அள­வி­லும் ஐ.நாவி­லும் மைத்­திரி, ரணி­லுக்கு எதி­ராக ஏதா­வது ஒரு கருத்­தை­யா­வது முன்­வைத்­தி­ருப்­பாரா? இவ்­வா­றான ஒரு­வ­ரின் அர­சி­யலை மக்­கள் நன்கு அறிந்து வைத்­தி­ருப்­பார்­கள்.

ஊருக்­குத்­தான் உப­தே­சம்

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யை­யும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பை­யும் தூற்றி வரும் கஜேந்­தி­ர­கு­மார் தனது காங்­கி­ரஸ் கட்­சியை தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யாக மாற்­றி­யுள்­ளார்.

அதனை இன்­று­வரை பதிவு செய்­யா­மல் இருந்து கொண்டு மற்­ற­வர்­களை இவர் தூற்­று­வது சரி­தானா ?

தனக்கு ஒரு நியா­யம் ஊருக்கு ஒரு நியா­யம் என்று அர­சி­யல் செய்து வரும் அவ­ரும் அவ­ரது குழு­வி­ன­ரும் மக்­கள் மத்­தி­யில் பொய்­யான வதந்­தி­களைப் பரப்­பு­வதை நிறுத்­த­வேண்­டும்.

அவ­ருக்கு இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் ஒரு சவால் விடு­க்கின்­றேன். அவர் தூய அர­சி­யல்­வாதி என்­றால் என்­னு­டன் நேரடி விவா­தத்­துக்கு வரு­மா­றும் அழைப்பு விடுக்­கின்­றேன்-– என்­றார்.