முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடும் நிலைமை வரக்கூடும்!

“எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சிலவேளை நான் போட்டியிடகூடிய சூழ்நிலை உருவாகலாம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழாவில் சிறிதரன் எம்.பி. உரையாற்றும்போது தெரிவித்த கருத்துக்கு, அந்த நிகழ்வில் பதிலளித்து உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.